search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி உரிமையாளர்கள் சங்கம்"

    திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி செயலாளர்ராக சிங்காரம், பொருளாளராக வி.கே.ஜி.கந்தசாமி, துணை செயலாளர்களாக நந்தகோபால், சந்திரசேகரன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை காரணமாக லாரி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. எனவே அதன் விலையை குறைக்க மத்திய&மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுங்கசாவடி கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஆடிட்டர் என்.கே.எம். நல்லசாமி உள்பட லாரி உரிமை யாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ஈரோடு மாவட்டத்தில் லாரி ஸ்டிரைக் காரணமாக சுமார் 5 ஆயிரம் லாரிகள் இன்று ஓடவில்லை. லாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. #LorryStrike
    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது, சுங்க சாவடிகள் அகற்ற வேண்டும்,தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் இன்று முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்துக்கு ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கமும ஆதரவு தெரிவித்து இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    லாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மேலும் பல்லாங்குழி, தாயம் விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகிறார்கள்.

    லாரி ஸ்டிரைக்கால் ஜவுளி பொருட்கள், மஞ்சள், எண்ணெய் வித்துகள், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது.-

    எங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறோம்.ஈரோட்டில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பே வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய சரக்குகளின் புக்கிங் நிறுத்தப்பட்டு விட்டது.

    இது எங்கள் வாழ்வாதார பிரச்சனை ஆகும். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். ஏற்கனவே வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அங்கே பாதுகாப்பாக நிறுத்த அறிவுத்தப்பட்டுள்ளது.

    எனினும் பால், மருந்துகளை போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு மட்டும் இந்த ஸ்டிரைக்கில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    ×